புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

மன்னாரில் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் எமில் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றிலிருந்து  எரியுண்ட  நிலையில்
பெண் ஒருவருடைய சடலத்தை செவ்வாய்க்கிழமை மதியம் மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மன்னார் சின்னக்கடை  பகுதியை வதிவிடமாகக் கொண்ட செபஸ்தியான் திரேசா (65 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். எமில் நகரில் உறவினர்களுடன் வசித்து வந்த இப்பெண் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இவருக்கு ஒரு கால் இயலாத நிலையில் கம்பு ஊன்றியே சென்றுள்ளார்.  நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.   இந்நிலையிலேயே கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அருகில் மண்ணெண்ணெயும் காணப்பட்டது. இது  தொடர்பாக உறவினர்கள் உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  சடலம் மீட்கப்பட்ட  கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சுமார் 50  மீற்றர் தொலைவில் உள்ள கடை ஒன்றில் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை குறித்த பெண் வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.   இவர் திருமணமாகாதவர் என்பதுடன் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

ad

ad