உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இந்த நிலையில் விடுத்த கோரிக்கையினை ஐ.சி.சி ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன்னர் அறிவித்தது.
இதேவேளை தரங்கவை அணியில் இணைப்பதற்கு இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.