புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன.


இந்த நிலையில் இப்பிரதேச சபையில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் தேர்தல்கள் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டங்களை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இப்பிரதேச சபைகளில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு பிரதேசசபைக்கும் 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுவைச் சேர்ந்த 162 பேர் போட்டியிடுகின்றனர்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஆறு அரசியல்கட்சிகள் சார்பில் 90 வேட்பாளர்களும் புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஐந்து அரசியல் கட்சி மற்றும் ஒரு சுயேச்சைக்குழு சார்பில் 72 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் பரப்புரைகள் அமைதியான முறையில் சட்டத்தை மதித்து, இராணுவ தலையீடு இன்றி, வன்முறைகள் இன்றி நடைபெற்றதாக கபே தேர்தல் கண்காணிப்பு இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad