டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
அப்போது நில அபகரிப்பு சட்டத்திற்கு எதிராக போராடி வரும் வைகோவிற்கு ஓம் பிரகாஷ் சௌதாலா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திகார் சிறை 2ல் உள்ள கண்காணிப்பாளர் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.
அப்போது வைகோ, ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் வழக்கிலிருந்து விரைவில் விடுதலை ஆவீர்கள் என்று தெரிவித்தார்.