புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக ஐரோப்பாவுக்கு கப்பல் போக்குவரத்து -

சென்னையிலிருந்து வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை
தொடங்கியது. தென்னிந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் சென்னை துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள் சிறிய கப்பல்களில் சிங்கப்பூர், போர்ட், கிளாங், கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலம் சென்றடைய வேண்டிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையிலிருந்து நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 கடல் வழித்தடங்களில் நேரடி கப்பல் போக்குவரத்து சென்னையிலிருந்து தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. தற்போது  சென்னையிலிருந்து கொழும்பு வழியாக வளைகுடா, ஐரோப்பா, வட ஆபிரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான 'மார்ஸ்க் சிப்பிங் லைன்' சார்பில் 'எம்.வி. மார்ஸ்க் இடாகோ' என்ற கப்பல் முதல் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சென்னைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நேரடி கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் என்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ad

ad