புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2023

காலத்தின் பேருதவி. தமிழ் அரசியல் கைதிகளுக்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் வழங்கினார்.

www.pungudutivuswiss.com

லைக்கா நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் முயற்சியால் பல வருடங்களாக இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே, இதன் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட மேலும் 13 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 தமிழ் அரசியல் கைதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் என மொத்தமாக இதுவரை விடுக்கப்பட்டுள்ள 28 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடக தலா 25 இலட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை (06.06.2023) இலங்கை தலைநகரான கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லைக்கா நிறுவனத்தின் நிறுவனரும்தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை பல வருட காலங்களாக சிறைகளில் தம் வாழ்வை தொலைத்த இவர்களுக்கு, தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதனை உணர்ந்த அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாகும்.

அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும் என இதுவரை 28 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad