-

20 மே, 2026

பருத்தித்துறை நகரசபை:விசாரணைக்கு அனுமதி!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீதான விசாரணைக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதித்துள்ளது.

முன்னதாக விசாரணைக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவும் இரத்து செய்யப்பட்டதுடன், வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணையை தொடர அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, விசாரணையை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாது .தவிசாளர் தரப்பு நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் பருத்தித்துறை நகரசபை தவிசாளரை பதவி நீக்க வேண்டிய அரசியல் தேவையினாலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தவிசாளர் தரப்பு மறுதலித்துள்ளது.

ad

ad