கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழைத்துவரவுள்ள ஆபத்தான நபர்
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது என்றும், அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே அவரைக் பொறுப்பேற்க விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என்று அழைக்கப்படுபவரையே இவ்வாறு அழைத்து வரச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை என்றும், டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளதாக கூறப்படுகின்றது.
பாதாள உலகக்குழுவை சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது
கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் தகவல்கள் பரவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார். குறித்த பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் உரிய உத்திகளின் படி செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதுடன், பலரது உயிர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.