-

22 ஆக., 2026

www.pungudutivuswiss.com
மன்னிப்புக் கோரி விட்டு நாடாளுமன்றில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா!
[Saturday 2026-08-22 10:00]


பாராளுமன்றத்தில் இருந்து விடைபெறுகின்றேன். இதுவே எனது இறுதி உரை.  இவ்வளவு காலம் யாருடைய மனமும் வருந்தும் வகையில் நான்  நடந்துகொண்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன்.  சென்று வருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இருந்து விடைபெறுகின்றேன். இதுவே எனது இறுதி உரை. இவ்வளவு காலம் யாருடைய மனமும் வருந்தும் வகையில் நான் நடந்துகொண்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். சென்று வருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது எனது இறுதி உரையாகும். நான் யாருக்காவது எப்போதாவது தவறு செய்துள்ளேனா? நான் எனது மக்களை நேசிக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் நான் ஆதரவானவன். அத்துடன் இறுதியாக நான் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் முஸ்லிம் மக்களுக்கானது. நான் இந்த பாராளுமன்றத்தில் பாராளுமன்ற அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மனங்கள் நோகும்படி பேசியிருந்தால் மனம் வருந்துகின்றேன்.

நான் யாருடனும் டீல் போட்டிருக்கவில்லை. எனது பக்கத்தில் இருந்து கதைத்தேன். நான் போன பின்னர் எங்கே அர்ச்சுனா என்று தேட வேண்டாம். 2029இல் சரி அதன் பின்னராவது வரலாம். தேசியப் பட்டியலிலாவது வரலாம். நான் இங்கே எதாவது தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கின்றேன்.

நான் தமிழன் என்று தைரியமாக குறிப்பிடுவேன். சிங்களவர்களை கட்டியணைப்பேன். என்னில் இனவாதம் இல்லை. என் மக்களுக்காகவே குரல் கொடுத்தேன். எனக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கு அரசாங்கத்திடம் அடிபணிய போவதில்லை.2029 ஆம் ஆண்டு நான் தேர்தலில் போட்டியிடும் பகுதியில் தேசிய மக்கள் சக்தியினர் எவரேனும் போட்டியிட்டால், மக்கள் அவர்களை அடித்து விரட்டுவார்கள் .சென்று வருகிறேன் என்றார்.

ad

ad