ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் ஞானி, அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். கட்சியின் உடல் நிலையும், தனது உடல் நிலையும் சரியில்லாததாலேயே தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
-
29 ஜூன், 2014
இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம்
பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.
28 ஜூன், 2014
நயினையில் இன்று கொடி
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
அவுஸ்திரேலியா சென்ற ஈழத்தமிழர்களின் படகு நடுக்கடலில் பழுது
தமிழ் நாடு புதுச்சேரியில் இருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரி படகில் சென்ற 153 ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து
“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”
அன்புடையீர், வணக்கம்.
எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின், “இறுவெட்டு” வெளியீட்டு விழா!
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
அன்புடன் அழைக்கின்றோம்…
எமது மதிப்பிற்குரிய இசைப் பிரியர்களே!
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு
“சங்கீத பூசணம்” பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் பக்திப் பாடல் “இறுவெட்டு” வெளியீட்டு விழா.
இன்னிசை வேந்தர், சங்கீதபூஷணம், இளம் கலைஞர் மன்ற ஸ்தாபகர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் பாடல் தொகுப்பான இறுவெட்டு வெளியீட்டு விழாவிற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
இடம் : Ealing Town Hall, New Broadway, Ealing, London W5 2BY
திகதி : FRIDAY 27.06.2014 மாலை 6.30 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து தங்கள் ஆதரவினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (லண்டன்)
கருணை – 07958083456
கங்கா – 07766442273
கருணை – 07958083456
கங்கா – 07766442273
27 ஜூன், 2014
32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்! வடக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்
வடமாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சின் நடப்பாண்டிற்கான செயற்றிட்டங்களில் ஒன்றாக கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் விவசாய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு புழுதி ஆற்று ஏற்றுநீர்
சென்ஜோன்ஸ் மாணவன் விபத்தில் சாவு
இன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில்
புலிகள் என சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்ய முடியுமாயின் பொதுபலசேனாவை ஏன் கைது செய்ய முடியாது

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின் அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை
சுன்னாக வாசிக்கு மரணதண்டனை விதிப்பு
சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
26 ஜூன், 2014
தெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக் குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.
அம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.
25 ஜூன், 2014
நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து |
தமிழர்களுக்கான நிரந்தரதீர்வைப் பெற அழுத்தம் கொடுங்கள்; சுவிஸ் தூதுவரிடம் அவைத்தலைவர் வேண்டுகோள்
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்த
சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)