ஆசியக்கிண்ணம் 2019
இறுதியாடடம்- யப்பான் எதிர் கட்டார்
அரை இறுதி
யப்பான் .- ஈரான் 3-1
கட்டார் - ஐக்கிய அரபு ராச்சியம் 4-0
கால் இறுதி
யப்பான் - வியடனாம் 1-0
ஈரான் - சீன 3-0
கட்டார் - தென்கொரியா 1-0
ஐ அ ராச்சியம் - அவுஸ்திரேலியா 1-0
ஐரோப்பாவில் எவரும் தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் சுவிஸ் யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை காலை 8-30 க்கு ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர் சாம்பியனாக இருந்து வரும் லீஸ் யங்ஸ்டார் கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம்
யாழ் வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து இன்று (22) விடுவிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
குறித்த காணிகள் நேற்று (21) விடுவிக்கப்பட்ட போதும் இன்று (22) காலையே காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் ஜே-249, ஜே-250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களை புடைப்பு சிற்பங்களாக வரைந்துள்ளனர்.
மேலும் காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் தற்போது புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சடடதரணியாகிய சத்தியப்பிரமணத்தின் பின்னரான திரு கே வி தவராசாவின் விருந்துபசார வைபவம் ----------------------------------------------------------------------- இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அடிக்கற்கள் நிகழ்வு
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த "அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு 2019!