-
16 செப்., 2013
வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் வடக்கில் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும்!- சுனந்த தேசப்பிரிய
வட மாகாண சபை தேர்தலில் வாக்குகள் கொள்ளை இடம்பெறாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இப்போது வெற்றி பெறும் என்பதை காணக்கூடியதாகவுள்ளது.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்த சுமந்திரன், தவராசா!- சர்வதேச கண்காணிப்பாளர்களின் பணி வட மாகாணத்தில் இன்று ஆரம்பம்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 21 பேரும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் மாகாண சபைத் தேர்தல்களில்
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
ஆந்திராக்காரர்கள் போல் நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில்
பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
சேரன் இயக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, ‘’ சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப் படும்’’என்றார்.
14 செப்., 2013
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை கோரும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது?
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
கிளிநொச்சியை அழிப்பதில் ஈபிடிபி கங்கணங்கட்டி அலைகிறது! அதற்கு எம் தலைமைகள் அனுமதிக்காது: பசுபதிப்பிள்ளை காட்டம்
கிளிநொச்சியின் அபிவிருத்தி என்பது பிரதானம், அதனை ஈபிடிபி தடுத்து பித்தலாட்டம் செய்கிறது. இது அரசின் பணமல்ல, உலக நாடுகளுடையது என தனது மண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுடன் உச்சரிக்கிறார் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிராமசேவையாளருமான திரு.சு.பசுபதிப்பிள்ளை.
விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!
மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)