சென்னை டெஸ்ட்: சேவாக்குடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்?
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில்
இலங்கைக்கு எதிரான பிரேரணைகளைத் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கத் தயார்!- ரஷ்ய தூதுவர்
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஷ்யாவின் புதிய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கான மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், நேற்று மன்மோகன் சிங்கை சந்திதத போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சனல்- 4 இன் புதிய வெளியீடு 'நோ பயர் சோன்': அடுத்த மாதம் ஐநா பேரவையில் வெளியிடப்படும்
“இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கெல்லம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை
ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர்
புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றலாம் என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் மருத்துவமனைக்கு எதிராக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சனல்4ன்ஆவணப் படத்தின் ஒரு பகுதி தமிழில் விளக்கங்களுடன் காணொளி
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலையே என்பதை தமிழில் மொழிமாற்றி புதியதலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் ஒளிபரப்பிய காணொளி அனைவரும் இதனை பார்க்க வேண்டும் சனல் 4 ன் ஆவணப் படத்தினையே வெளியீட்டுள்ளது ….தமிழன் நிமிராத வரை இதை விட மிகப் பெரிய படுகொலைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்
2013 ஆம் வருடத்திற்கான வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.PHOTOS
ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் கடிதம்
ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கையுடன் கூடிய
பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார
மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின்
இலங்கை அரசை எதிர்த்து மார்ச் 4ம் தேதி தமிழகமெங்கும் கண்டன அறப்போராட்டமும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தெல்லிப்பழைக்கும், ஜெனீவாவுக்கும் இந்த அரசு ஒரே மாதிரியான பதிலை சொல்லி தப்ப பார்க்கிறது!- மனோ கணேசன
தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையதளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன.
பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும்
பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித
இலங்கை மீது பொருளாதாரத் தடையை அமுல்படுத்து! இல்லையேல் இலங்கை நிறுவனங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்துவோம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது
பிரபாகரன் மகன் கொலை: நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசு
இலங்கை இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனால் அது உண்மையல்ல பொய் என சேனல் - 4 ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.
உலகின் பாரிய தேடுதல் தளமான விக்கிபீடியா வில் கட்டுரை களை எழுதத் தொடங்கியதையிட்டு எனக்கு வந்த நன்றி கடிதம் எனது முதல் கட்டுரையே புங்குடுதீவு என்பதாகும் சிவ-சந்திரபாலன்
நன்றி
வணக்கம் சிவா சந்திரபாலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புங்குடுதீவு கட்டுரையில் பல தகவல்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. பிரபலமான நூல்கள் என்ற உப தலைப்பில் சேர்த்த பட்டியல்கள் அனைத்தும் தலைப்புக்குப் பொருத்தமில்லாதவை. அவை புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் எழுதிய பிரபலமான நூல்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை புங்குடுதீவைப் பற்றியவை அன்று. இதனால் அவற்றை நீக்கியிருக்கிறேன். புங்குடுதீவு பற்றி எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைச் சேருங்கள். நூலகத்தில் இருக்கும் இரண்டு நூல்களைப் பறிய விபரங்களை வெளி இணைப்புகளாகத் தந்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags\உரையாடுக 00:30, 21 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் சிவா-சந்திரபாலன். பார்க்க மடத்துவெளி சனசமூக நிலையம் மற்றும் எஸ். கே. மகேந்திரன். ஆங்கிலத்தில் கட்டுரைகளுக்கு தலைப்பிடுவதில்லை ஆதலால் தமிழில் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, இதுவிக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும், இது குறித்து உங்கள் விளக்ககளை இங்கேயோ, கட்டுரை பேச்சுப் பக்கத்திலோ தெரிவிக்கவும், நன்றி--சண்முகம்ப7(பேச்சு)02:17, 27 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம், Siva-sandrabalan! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 28 அக்டோபர் 2012 (UTC)
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவை, அந்த வழியாக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்தமை அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ம.தி.முக பொதுசெயலர் வைகோ கோவளத்தில்
சிறிலங்காவிற்கு ஐ.நா மனிதஉரிமை சபை இராஜதந்திரக்களமாக மாறியுள்ளது: வி.உருத்திரகுமாரன்
ஐ.நா மனித உரிமை சபைக்கூட்டத் தொடர் சிங்கள அரசுக்கு இராஜதந்திரப் போர்களமாக மாறியுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் நவநீதிம்பிள்ளையினால் வெளியிடப்படும் கண்டனங்கள் சிங்கள அரசுக்கு தூக்குக்கயிறாகவும் மாறிவருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
இலங்கை அரசை கடுமையாகச் சாடியுள்ள நவநீதம்பிள்ளை! ஜெனீவாவில் நெருக்கடி நிலை: சனல்4 ஊடகம்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஒரு சுவாரஸ்மான கட்டுரை படித்து ரசியுங்கள் தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. கேவலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும்நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும்.
பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் உண்மையானது! சனல் 4 இயக்குனர் உறுதி!! இரவு 8மணிக்கு பார்க்கவும்!!!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் அதனை ஆதாரமற்றதாக சிறிலங்கா அரசுதரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சனல்4 இயக்குனரை நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. இந்த உரையாடல் இன்னும் சற்று நேரத்தில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் 8 மணியளவில் உளிபரப்பாக உள்ளது.
பாலச்சந்திரனின் புகைப்பட ஆதாரத்தை மறுப்பது சிறிலங்கா அரசின் முட்டாளத்தனம் - கெலன் மெக்ரே!!!
சனல்4 தொலைக்காட்சியால் வெளியடப்பட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவை உண்மைக்கு புறம்பானவை என சிறிலங்கா அரசுதரப்பில் தெரிவித்ததை மறுத்துள்ளார் கெலன் மெக்ரே.
சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலன் மெக்ரே புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நர்கானலில் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் வெளியான புகைப்படமும் தற்போது வெளியடப்பட்டுள்ள புகைப்படங்களும் ஒரே புகைப்பட கருவியால் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக உலகப்பிரபல்யம் பெற்ற தடயவியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட படுகொலை எனத் தெரிவத்த கெலன் மெக்ரே இதனை பொய்யானதென சிறிலங்கா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முயற்சிப்பது சிறிலங்கா அரசின் முட்டாள்த்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக கெலன் மெக்ரே மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கருடாழ்வான் என்றவரின் முக நூலில் இருந்து நன்றி
முகப்புத்தகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும், அன்னை சோனியாவை அரக்கியாகவும், ராகுல் காந்திக்கு இது போல் நடக்க வேண்டும் என்று சாபம் கொடுத்தும் தங்கள் தமிழ் பற்றை காட்டிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
சந்தடி சாக்கில் நாம் சில விஷயங்களை மறக்கக் கூடாது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,மீண்டும் ஏகமனதாகத் தெரிவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளராக செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை
வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
சென்னையில் மலிவு விலை உணவகங்களை ஜெ. இன்று திறந்து வைத்தார்
சென்னை நகரில் முதலில் 200 வார்டுகளிலும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகங்களில் இட்லி, தயிர்சாதம், சாம்பார் சாதம் ஆகியவை விற்கப்படுகிறது. காலை 7 மணிமுதல் 10 மணி வரை இட்லி விற்கப்படும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தயிர்சாதமும், சாம்பார் சாதமும் விற்கப்படும். இந்த உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.05 மணியளவில் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உணவகத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 15 உணவகங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.
அதன் பிறகு உணவு கூடத்துக்குள் சென்று இட்லி, சாம்பார் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டார். உணவகத்தை நிர்வகிக்கும் சுயஉதவி குழு பெண்களிடம் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் என்று விசாரித்தார். உணவகத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடக்க விழாவையொட்டி இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரவா கேசரி வழங்கப்பட்டது. இங்கு தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் மற்ற 14 இடங்களிலும் மலிவு விலை உணவகங்கள் செயல்படத் தொடங்கின.
இன்று திறக்கப்பட்ட 15 உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகள் :
திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு, மாநகராட்சி வணிக வளாகம் டி.எச்.சாலை.
மணலி மண்டலம், 19 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், 29-வது தெரு, மாத்தூர்.
மாதவரம் மண்டலம், 24 வது வார்டு, சமுதாய கூடம், சூரப்பட்டு.
தண்டையார் பேட்டை மண்டலம், 48 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பொம்மி சிவராமுலுதெரு, வண்ணாரப்பேட்டை.
ராயபுரம் மண்டலம், 55 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நாட்டுபிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி.
திரு.வி.க.நகர் மண்டலம், 79வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு
அம்பத்தூர் மண்டலம், 73வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், கட்டபொம்மன் தெரு, ஒரகடம்.
அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டு, பழைய மண்டல அலுவலகம், டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்.
தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சாந்தோம் நெடுஞ்சாலை.
கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், சிவஞானம் சாலை, தி.நகர்.
வளசரவாக்கம் மண்டலம், 146 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பூந்தமல்லி ரோடு, வடக்குமாடவீதி அருகில், மதுரவாயல்.
ஆலந்தூர் மண்டலம், 166 வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், நேரு நெடுஞ்சாலை, நங்கநல்லூர்.
அடையாறு மண்டலம், 181வது வார்டு, மாநகராட்சி கட்டிடம், பி.ஜி.இ. காலனி, குப்பம் கடற்கரை சாலை, திருவான்மியூர்.
பெருங்குடி மண்டலம், 184 வது வார்டு, வணிக வளாகம், அண்ணா நெடுஞ்சாலை.
சோழிங்க நல்லூர் மண்டலம், 195வது வார்டு, குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், கண்ணகி நகர் 2-வது பிரதானசாலை, துரைப்பாக்கம்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்! - தெ இன்டிப்பென்டன்ட் பத்திரிகை
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?வைகோ,
இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர் பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து ஆதங்கத்துடன்
மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: 13 பெண்கள் கைது
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் செயற்பட்டு வந்த விபசார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என கோரி மன்னார் ஆயர் உட்பட வடக்கு, கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- தினக்கதிர்
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர். நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர். தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.------------
-தணிக்கை செய்துள்ளோம் முழுவதையும் பிரசுரிக்க முடியவில்லை மன்னிக்கவும்
சுவிட்சர்லாந்தின் போஆப் என்ற தகவல் தொடர்பாளி அளித்தபேட்டியில் கோமிகல் என்ற பிரான்ஸ் நிறுவனம் தயாரித்த லாசாக்னா என்ற உறைந்த இறைச்சியில் மாட்டிறைச்சியோடு குதிரையிறைச்சியும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் வைத்து நேற்று அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா - மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.