புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 அக்., 2019

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு


இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என
செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அதன் உண்மை மேலும் வலுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய திரைத்துறையினரையும் அதற்கு பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை என்ற கவனம் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. இவர் அண்மையில் குறித்த போலி இலக்கிய நிகழ்விற்காக இலங்கை வந்திருந்தார்.
அந்த இலக்கிய நிகழ்வு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இலங்கை அரசுக்கு ஆதரவான இயக்கங்களான ஈபிடிபி மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராசாப்பெருமாள் தரப்பால் நடத்தப்பட்டது. குறித்த இலக்கிய நிகழ்வுக்கு சென்ற லெனின் பாரதி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களும் ஈபிடிபி இயக்கத்தை சேர்ந்த கவிஞர்களுமான கருணாகரனும் சுகனும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
டக்ளஸ் தேவானந்தா இம்முறை தேர்தலில் போர்க்குற்றவாளி கோத்தபாயே ராஜபக்சேவை ஆதரிக்கின்றார்.
டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு போராட்டத்தை காட்டிக் கொடுத்ததுடன் ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களை; படுகொலை செய்தவர்.
இவரது ஆதரவாளராக செயற்படும் எழுத்தாளர் கருணாகரன் இந்த இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் ஈழ எதிர்ப்பு தமிழக கம்யூனிஸ்ட் சிராயுதீனும் இந்த சந்திப்பில் டக்ளசை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துப் பாராட்டிய இயக்குனர் லெனின் பாரதி எழுத்தாளர்கள், கலைஞர்களை படுகொலை செய்த டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்திருப்பது தமிழக மற்றும் ஈழத்து எழுத்தாளர்களை பெரும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது