புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2021

வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன?? உயிரிழந்தவரின் மனைவியின் கதறல் இது!!

www.pungudutivuswiss.com

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர்,

வீதியால் சென்ற பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தகராற்றில் ஈடுபட்டு, அது இறுதியில் கைகலப்பாக மாறி ஒருவருடைய உயிரையே பறித்துவிட்டது.

சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் நண்பர் தகவல்(கனகராசா சரவணன்)

நானும் பாலேந்திரனும் முச்சக்கர வண்டியில் வீதியால் சென்ற போது நான் யார் என தெரியுமா பொலிஸ் என கூறிக்கொண்டு அவர் துப்பாக்கியை எடுத்ததும் துப்பாக்கி வெடித்தது எனது நண்பன் கீழே விழுந்தான் என முச்சக்கரவண்டிச் சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவித்தார். இது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற போது உயிரிழந்தவருடன் இருந்த முச்சக்கரவண்டிச் சாரதியும் அவருடைய நண்பருமான விஜயராஜா இசெவ்வாய்க்கிழமை (22) இவ்வாறு தெரிவித்தார்.

நானும் பாலசுந்தரமும் நண்பர்கள். சம்பவ தினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார். இதன்போது அவரைக் கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன். இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ அவர் கூப்பிடுகின்றார். கதைத்துவிட்டு போவோம் என்றார்.

அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர் நண்பனிடம் கேட்டார் என்னடா கைகாட்டிச் சென்றனீ எனக் கேட்டார். அதற்கு நண்பன் இதைக் கேட்க நீ யார் என்றார். அப்போது மெய்பாதுகாவலர் இதை கேட்க நீ யார் என இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டு நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது. நண்பன் கீழே விழுந்தான். இரத்தம் வெளியே வந்தது. அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.

அதேவேளை நண்பனுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்ப் பாதுகாவலருடன் பிரச்சினை நடந்திருக்கின்றது. எனக்கு அது பற்றித் தெரியாது என்றார். முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளமை உறுதியாகிறது

ad

ad