புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2021

www.pungudutivuswiss.com
சுவிஸ்ஸில் இறப்புகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
சுவிட்சர்லாந்தில் 2020ல் மட்டும் 76,200 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது 2019ம் ஆண்டில் பதிவான இறப்பு எண்ணிக்கையை விட 12.4% அதிகம் என கூறப்படுகிறது. கொரோனா பரவலால் ஆயுட்காலம், பிறப்பு, திருமணம் மற்றும் விவாகரத்து என அனைத்தும் சரிவை கண்டுள்ளன.

மொத்தம் 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில், 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 1,700 இறப்புகள் பதிவாகியுள்ளது. ஆனால், அதே ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மாதங்களில் 7,800 இறப்புகள் பதிவாகியுள்ளது.

இது 2019ஐ ஒப்பிடுகையில் 45% அதிகமாகும். மேலும், சுவிஸ் குடிமக்களில் இறப்புகளின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் ஆண்களில் 13.7% அதிகமாகவும், பெண்களில் 9.3% அதிகமாகவும் காணப்பட்டுள்ளது.

அதேவேளை சுவிஸ் குடிமக்கள் அல்லாதோரில் ஆண்கள் 22.8% எனவும் பெண்கள் 20.4% எனவும் இறப்பு பதிவாகியுள்ளது.

மேலும், 2020ல் 80 வயது கடந்தவர்களின் இறப்பும் 15.5% அதிகரித்துள்ளது. மட்டுமின்றி 2020ல் திருமணங்களின் எண்ணிக்கை 9.8% சரிவடைந்துள்ளது.

ad

ad