புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2023

விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய வரிகள்! - கனேடியப் பிரதமர் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com


 கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்படி, பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களிடம் கேட்க உள்ளேன். அவர்களின் திட்டம் நடுத்தர மக்களுக்கும், அதில் கடினமாக உழைக்கும் மக்களுக்கும் உண்மையான நிவாரணம் வழங்கவில்லை என்றால், நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். வரி விதிப்பு உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம்.

இதுதவிர, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் தடுமாறும் நிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும்.

மக்கள் பலர் கஷ்டப்படும் நேரத்தில், சூப்பர் மார்க்கெட்டுகள் இலாபம் ஈட்டி சாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது பெரிய மளிகை சங்கிலிகள் சாதனை இலாபம் ஈட்டுகின்றன. குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களின் முதுகில் ஏறி இந்த இலாபம் சம்பாதிக்கக்கூடாது என ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

ad

ad