| போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா! [Saturday 2026-07-18 07:00] |
![]() போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர். |
இந்த பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 501 வீரர்களின் உடல்களை மீட்டு இருப்பதாக உக்ரைனிய அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 31 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் இருந்து பெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருநாடுகளும் திரும்ப பெறும் உடல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது. உக்ரைனிய அரசு இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 600 உடல்களை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் இருநாடுகளும் தங்கள் தரப்பு உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர். இதனால் இந்த போரில் ஏற்பட்டுள்ள உண்மையான உயிர் சேதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
-
19 ஜூலை, 2026
www.pungudutivuswiss.com
