| நீதி கோரிய போராட்டம் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது! [Sunday 2026-08-30 16:00] |
![]() வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார் |
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர். அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது. இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது என்றார். |
-
31 ஆக., 2026
www.pungudutivuswiss.com
