| பாஜகவுடன் கை கோர்க்க போகும் ஸ்டாலின்? [Sunday 2026-08-30 17:00] |
![]() திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகும் நிலையில், அதில் திமுகவும் பங்கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருக்கிறார். தமிழகத்திலும் சரி, தேசியளவிலும் சரி இப்போது அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறிவிட்டன. |
தவெக தலைமையிலான கூட்டணி உருவாகியுள்ளது. தேசியளவிலும் வினாத்தாள் லீக் என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கிடையே பிரபல தி இந்து ஊடகத்திற்கு சிதம்பரம் அளித்த பேட்டியில் அவர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சிதம்பரம் நீட் கேள்வித்தாள் லீக் ஆவது குறித்து பேசிய அவர், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் தேர்வு நடத்தப்படும்போது, வினாத்தாள் லீக் ஆவதாக குறிப்பிட்டார். நாடு முழுக்க இதுபோன்ற போட்டி தேர்வை நடத்துவது கடினம் என்றும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றாததே காரணம் என்றார். இதற்கிடையே 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலில் இப்போது திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் திமுக- பாஜக இடையே கூட்டணி அமையலாம் என்றும் பாஜக அமைச்சரவையில் திமுக பங்கெடுக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்தும் ப. சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. Also Read கரப்பான் பூச்சி கட்சி ஓரிரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.. அடித்து சொல்லும் ப.சிதம்பரம் வாய்ப்பே இல்லை அதற்கு பதிலளித்த சிதம்பரம், திமுக பாஜகவுடன் நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் மேலும், "திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அப்படி அவர்கள் செய்தால், அது அவர்களே தங்களுக்கு தாங்களே ஏற்படுத்தி கொள்ளும் பாதிப்பாக இருக்கும்" என்று அவர் கூறினார். தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய தொகுதி பங்கீட்டை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளித்ததை அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் சட்டசபை தீர்மானத்தில் திமுக எடுத்த முடிவே அவர்கள் நிலைப்பாட்டை காட்டுவதாக சிதம்பரம் தெரிவித்தார். எனவே, திமுகவும் பாஜகவும் எதிர்காலத்தில் நெருங்குவதற்கான வாய்ப்பு குறித்து எழுந்த கேள்விக்கு, "அதற்கான வாய்ப்பே இல்லை" என சிதம்பரம் பதிலளித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2019ல் திமுக ஒரு வலிமையான கூட்டணியை அமைத்திருந்தது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என வரிசையாக அனைத்து தேர்தல்களிலும் திமுக மிக பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. அந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகளும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. மேலும், அந்த கட்சிகளுக்கு தவெக அரசிலும் பங்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
-
31 ஆக., 2026
www.pungudutivuswiss.com
