தாயகத்துக்காக மரணித்த செந்தில் குமரனுக்கு விடுதலைபுலிகளின் மதிப்பளிப்பு
ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது
ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கச்செய்வதில் ஜ.நாவின் தலையீடு அவசியம் என்பதையும் சர்வதேசம் தமிழர்களிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் வழியில் செந்தில்குமரனும் தமிழினத்தின் சார்பாக தீயில் வெந்தான் என்ற வரலாறும் தமிழின விடுதலைக்கு வலுச்சேர்க்கட்டும்.
ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்