தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலைச்
'டித்வா' புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
www.pungudutivuswiss.comபோதைப்பொருட்களைக் கடத்தி வரும் பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய படகுகளைக் கண்காணிக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்காணிப்பு அமைப்பிற்குள்
இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களை இங்கிலாந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஆணையாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு, லண்டன் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதே பதவிக்கு, முன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசுகளை மேற்படி பேரவை நிராகரித்திருந்தது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், முதலாம் இராஜராஜசோழன் பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை கண்டெடுத்துள்ளான். செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தின் மாலைநேர சிறப்பு வகுப்பின்போது பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஒரு ஈழக்காசை, 10-ம் வகுப்பு மாணவன் பா.பிரசித் பாலன், கண்டெடுத்து பள்ளித் தலைமையாசிரியர் மு. அகமது பெய்சலிடம் தெரிவித்துள்ளான். பள்ளியில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதை
2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உட்பட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்று இருக்கின்றனர்.
நாட்டின் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு உதவுவதற்காக போலந்துக்கு ஒரு படையினரை அனுப்பப்போவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்த நெருக்கடி அதிகரித்து வரும் நிலையிலேயே ஜேர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வலுவான ஆதரவாளரான போலந்து, கடந்த ஆண்டு மே மாதம் பெலாரஸ் மற்றும் ரஷ்ய கலினின்கிராட் பகுதியை உள்ளடக்கிய அதன் எல்லையின் நீண்ட பகுதியை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
www.pungudutivuswiss.com கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
www.pungudutivuswiss.comயாழில் இருந்து கடந்த 28ஆம் திகதி கொழும்பு நோக்கி பயணித்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் அனுபவம் இன்றைய ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வந்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
www.pungudutivuswiss.comஅபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது.
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.