-
11 ஆக., 2026
| செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Tuesday 2026-08-11 08:00] |
![]() யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. |
| செம்மணி புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டிய குழியில் தலையற்ற எலும்புக்கூடு! [Tuesday 2026-08-11 08:00] |
![]() செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
10 ஆக., 2026
| கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை! [Monday 2026-08-10 17:00] |
![]() கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. |
இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகைமையினால் இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். |
| சாகர காரியவசம் கைது! [Monday 2026-08-10 17:00] |
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். |
9 ஆக., 2026
| தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைய கஜேந்திரகுமாருக்கு ஹக்கீம் அழைப்பு! [Sunday 2026-08-09 09:00] |
![]() தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பி வைக்குமாறும், தமது மத்திய குழுவில் ஆராய்ந்து தீர்மானத்தை அறிவிப்பதாகவும் பதிலளித்துள்ளார். |
7 ஆக., 2026
| மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்- முப்படைகள் குவிப்பு! [Friday 2026-08-07 08:00] |
![]() சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தயாரர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்று, அப்பிரிவிலிருந்து வெளியேறி திடீரென ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, இரவு 10.20 மணியளவில் இந்த அமைதியின்மை ஆரம்பமானதாகத் |
| குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்ற நிலை! [Friday 2026-08-07 08:00] |
![]() இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் சற்றுமுன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் |
6 ஆக., 2026
| ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுக்க உதவ வேண்டும்! [Thursday 2026-08-06 07:00] |
![]() தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் மகஜரொன்றைக் கையாளித்துள்ளார். |
| செம்மணியில் நேற்றும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2026-08-06 07:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன |
| மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி! [Thursday 2026-08-06 07:00] |
![]() இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். |
4 ஆக., 2026
| அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: 25 ஜனநாயக கட்சி மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு! [Tuesday 2026-08-04 07:00] |
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய மற்றும் வர்த்தக வரிகளை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 60 வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த இந்த புதிய வர்த்தக வரியை எதிர்த்து ஜனநாயக கட்சியினரின் தலைமையிலான 25 அமெரிக்க மாநிலங்களின் கூட்டணி திங்கட்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது. |
3 ஆக., 2026
| ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை" - பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு! [Monday 2026-08-03 16:00] |
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. திங்களன்று ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| ஆறு கட்சிகளின் கூட்டணி ஜனாதிபதியுடன் சந்திப்பு! [Monday 2026-08-03 16:00] |
![]() தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது |
1 ஆக., 2026
31 ஜூலை, 2026
| முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை! [Friday 2026-07-31 17:00] |
![]() முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
30 ஜூலை, 2026
| செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்! [Thursday 2026-07-30 18:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். |













