| செம்மணி புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டிய குழியில் தலையற்ற எலும்புக்கூடு! [Tuesday 2026-08-11 08:00] |
![]() செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (10) முன்னெடுப்பட்டன. எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் தலையில்லா முண்டமான என்புக்கூடு உட்பட 03 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய குழியில் இருந்தும் ஒரு என்புக்கூடு அடையாளம் காணப்பட்டு, முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது |
-
11 ஆக., 2026
www.pungudutivuswiss.com
