-

12 ஆக., 2026

www.pungudutivuswiss.com
பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார்
துப்பாக்கிச் சூட்டில் பலி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி! |
கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.

பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

ad

ad