| மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்- முப்படைகள் குவிப்பு! [Friday 2026-08-07 08:00] |
![]() சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தயாரர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்று, அப்பிரிவிலிருந்து வெளியேறி திடீரென ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, இரவு 10.20 மணியளவில் இந்த அமைதியின்மை ஆரம்பமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
போதைப்பொருள் தொடர்பான மோதலே இந்தப் பதற்றமான சூழ்நிலைக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர், காவல்துறைக் கலக தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையின் விசேட அதிரடிப்படைஉடனடியாக வரவழைக்கப்பட்டு, சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. |
-
7 ஆக., 2026
www.pungudutivuswiss.com
