புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2021

கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள் 55பேர் கொரோனா தொற்றுடெல்ரா வைரஸ்? -இந்தியர்கள் 55பேர் கோப்பாயில்

www.pungudutivuswiss.com
இந்தியா டெல்ரா வகை வைரஸ் தாக்கம் இலங்கையில் உச்சம் பெற்றுள்ள நிலையில் தெற்கின் கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள் 55பேர் கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.55 இந்தியர்களிற்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கம்பகா மாவட்டத்தில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இந்தியர்களிற்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு நேற்றுக் காலையில் கொண்டு வரப்பட்டனர்.

வுட இந்தியர்களான அனைவரையும் தனியான ஒரு விடுதியிலேயே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்ரா வைரஸ் தொற்றின் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளமை அச்சத்தை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.

ad

ad