புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2021

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்ததுநாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும் , கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.
2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய , இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16, 400, 000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad