மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார்!- கணபதி கனகராஜ்
-
22 ஏப்., 2013
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவ முடியாது! எம்ரிவி- எம்பிசி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து ஸ்ரீரங்கா
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு எம்ரிவி- எம்பிசி நிறுவன ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா
சந்திரிகா தொடர்பில் கடும் அச்சத்தில் அரசு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி
சுவிட்சர்லாந் பேர்ண் மாநகரில் த்ரிஷா ஜீவா பங்குபற்றும் படப்பிடிப்பு
ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண் நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர்
ஜீவா ,த்ரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்துக்கான படபிடிப்பு இன்று சுவிஸ் பேர்ண் நகரில் அமைந்துள்ள டிஸ்கோ கடை ஒன்றில் நடைபெற்றது ஏராளமான தமிழர்கள் நடிகர்களை காண குவிந்திருந்தனர் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் குழுவினர் காட்சிகளை ஒழுங்கமைத்து படமாக்கினர்
முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்
முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும்
21 ஏப்., 2013
அமெரிக்க அழைப்பை நிராகரிக்க மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, அரச படையினர் காரணமல்ல என்று இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, கடந்த 10ம் திகதி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
20 ஏப்., 2013
சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம் அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ நீங்களாகவே வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள் யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.
தொடர்புகளுக்கு
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 031 951 33 81
www .madathuveli .net
www .pungudutivuswiss .com
தினத்தந்தி அதிபர்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
சிவந்தி ஆதித்தன் காலமானார்
தினத்தந்தி அதிபர் சிவந்தி பா.சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
சென்னை பெசண்ட் நகரில் சிவந்தியின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடக்கிறது.
1958ம் ஆண்டு முதல் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் சிவந்தி ஆதித்தன். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்தார் சிவந்திஆதித்தன்.
ஊசி ஏற்றப்பட்டு அரை மணி நேரத்தில் உயிரிழந்தார் தாய்!- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!இந்தச் சம்பவத்தில் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயரட்ணம் நிர்மலாதேவி (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்
யாழ். போதனா வைத்தியசாலையில் ஊசி ஏற்றச் சென்ற இளம் தாய் ஊசி ஏற்றப்பட்டு அரை மணிநேரத்தில் உயிரிழந்தார். ஊசி போடப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார்
சுரேஷ் எம்பியிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை! (2ஆம் இணைப்பு)
இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின்
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!
14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாவற்குழிப்பகுதியில்
பெண்கள், சிறுமியர் இல்லங்களில் ஆண்கள் பணிக்கு வேண்டாம் – யாழ்.அரச அதிபர்!யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைக் கொண்டு இயங்கும் இல்லங்கள், நிறுவனங்களில் ஆண்களைப் பணிக்கு அமர்த்த வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க
BRAEKING NEWS
பொஸ்டன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாவது குற்றவாளி சுற்றிவளைப்புக்குள் (2ஆம் இணைப்பு)
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் கட்டிடத்தை அமெரிக்க காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பிடிபடாமல் இருந்துவருபவர் ஸோகார் சர்னயேவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்திருந்தனர்.
19 ஏப்., 2013
குருவி அயன் போன்ற சினிமா படங்களை பார்த்து கொலைக்கான திட்டத்தை வகுத்து கொண்டனர்.14 வயது முதலேதனது 14 வயது காதலனுடன் இரண்டு வருடங்களாக உடலுறவு கொண்டு வந்த பின்னர் சொந்த தி தகப்பனை கொலை செய்த அரக்கி தக்ஷனா இவர் தான்
மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார்.
அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.
தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி – பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தலக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பிள்ளைகளையும் மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்கள்.
ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது.
வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொறு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.
எனினும் குடும்ப உறவினர்களில் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துடுப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் பலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.
இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்படன அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்
பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதி மன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றனர் அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்எம்எஸ் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர்.
ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்கவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.
வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி கட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக மூடிந்திருக்கிறது.
அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் வீடு ரகுவின் குடும்பத்தினர் திரும்பியிருக்கிறார்கள்;. வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்க வில்லை.
சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்கியிருக்கிறாள் தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு’கசக்கிறது அம்மா’ என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் ‘உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர’என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.
அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகளி உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலாருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.
அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா ‘அம்மா அம்மா’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி ‘சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற’ என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார்.
அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில்,
‘ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா ‘உனக்கு இதுதான் கத’ என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு ‘ஓம் கசக்கிறதுதான்’ என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.
அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்’ என்றார்.
இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்
‘சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யுன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.
நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து ‘ என்ன அம்மப்பா’ என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். ஆங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்களள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்’என்றார்
மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கiயின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்hர்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர்.
இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:
கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
‘பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்’ என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.
கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.
இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெள்வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.
தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்
நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளார்.
நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளார்.
நஞ்சு வைத்தோம், பலிக்கவில்லை, பின்னர் பெற்றோரை வெட்டிக்கொன்றோம்-கொல்லப்பட்டவர்களின் மகளான தக்ஸிகா பின்வருமாறு கூறியுள்ளார்.
நான் அஜந்தனை காதலித்து வந்தேன். பெற்றோர் கடைக்கு சென்ற பின் வீட்டில் தனிமையில் இருவரும் சந்திப்போம். இரு வருடங்களாக ( 14வயதிலிருந்து) அஜந்தனுடன் உடலுறவு கொண்டு வந்தேன், மகளின் வாக்கு மூலம்
சென்னை தனியார் மருத்துவமனையில் திவாகரன் அனுமதி
18 ஏப்., 2013
17 ஏப்., 2013
பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து இந்திய சி.பி.எம்.
அதில், ”இலங்கைத் தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடநத வார ( 14) இதழில் கழுகார் பதில்கள் பகுதியில் ‘ஈழத்தமிழர் விவகாரத்தில் மற்ற கட்சிகளிடம்
2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27
அதிமுக 27 இடங்களில் வெல்லும்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் இழப்புகள் ஏற்படும். மின்தட்டுப்பாடு,
எச்சரிக்கை விடுக்காமல் தென்கொரியாவை அதிரடியாக தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்
அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில்
கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.
கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை
கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 ஏப்., 2013
தொடரும் சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள்
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில
*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை
*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை
*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை
* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை
*அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி 22 : 6 = 3.66 ஆறு போட்டிகளில் 22 கோல்கள்
* கோல் வித்தியாசம் +16
*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )
* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை
* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம் 4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம் 3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம் 5-1) என வரிசையாக வென்று வந்தமை
கழகம் இந்த வருடத்தில் நிகழ்த்திய சாதனைகள்
" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு அரையிறுதிக்குள் நுழையாமை(1)
நேற்று 14.04.2013 அன்று சுவிஸ் சிட்டி பாய்ஸ் கழகம் நடத்திய உள்ளரங்க உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தை டைந்து இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது இந்த வருடத்தில் நடைபெற்ற சுற்று போட்டிகளில் அதிகமான கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது வரும் இந்த கழகம் நேற்றைய சுற்றுப் போட்டிகளில் பல அற்புதங்களை நிகல்த்தியுள்ளது சிறந்த விளையாட்டு வீரரனாக நிருபன் கனகராசாவும் சிறந்த ஆட்ட நாயகனாக யசிதன் விஜயகுமாரும் தெரிவானார்கள் .
இந்த சுற்று போட்டியில் பங்கு பற்றிய இக்கழகம் பற்றிய தகவல்கள் சில
*விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றமை
*எல்லாப் போட்டிகளிலுமே இரண்டு கோல்களுக்கு மேலே அடித்து வென்றமை
*எந்த போட்டிகளிலுமே பனால்டி உதை மூலமான வெற்றி நிர்ணயிப்புக்கு செல்லாமல் வென்றமை
* எல்லாப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடித்துக் குவித்தமை
*அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி 22 : 6 = 3.66 ஆறு போட்டிகளில் 22 கோல்கள்
* கோல் வித்தியாசம் +16
*இறுதி ஆட்டத்தில்பலம் மிக்க தர வரிசையில் முதல் இடத்தில உள்ள கழகமான யங் பேர்ட்சை 4-1 என்ற ரீதியில் வென்றமை (முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றிலும் இதே கழகத்தை 6-0 என்ற ரீதியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது )
* இறுதியாட்டம் ஆரம்பித்த 50 ஆவது செக்கனிலேயே முதலாவது கோலையும் 1 நிமிடம் 44 செக்கனிலேயே இரண்டாவது கோலையும் 3நிமிடம் 49 செக்கனிலேயே மூன்றாவது கோலையும் அடித்து அசத்தியிருந்தமை
* சுவிசின் பலம் மிக்க பிரபலமான கழகங்களான யங் பேர்ட்ஸ் (இறுதியாட்டம் 4-1),றோயல் (அரையிறுதி ஆட்டம் 3-1 ), சுவிஸ் போய்ஸ் (காலிறுதி ஆட்டம் 2-0),யங் றோயல் குழு நிலை ஆட்டம் 5-1) என வரிசையாக வென்று வந்தமை
கழகம் இந்த வருடத்தில் நிகழ்த்திய சாதனைகள்
" அதிகமான சுற்று கிண்ணங்கள் வென்றமை (4)
*அதிகமான சுற்று போட்டிகளில் இருதியாடதுக்கு வந்தமை (8)
* அதிகமான புள்ளிகளை பெற்றமை
*அதிகமான முதல் மூன்று இடங்களுக்குள் வந்தமை (8)
* அதிகமான அரையிறுதிக்குள் நுழைந்தமை (8)
*பங்கு பற்றிய சுற்றுக்களில் குறைந்த அளவு அரையிறுதிக்குள் நுழையாமை(1)
15 ஏப்., 2013
பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)