-
26 நவ., 2013
ஆளுநர் ரோசைய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வறிக்கையை ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.
வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!
|
சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா |
சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது. அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். |
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து |
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புறக்கொண்டாடி வருகின்றனர்.
கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறியும், பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் கடந்த நள்ளிரவு 12.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறி தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
25 நவ., 2013
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முத்தையாக முரளிதரன் தெரிவாவாரா ?அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
சென்னையில் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்சென்னையில் பரபரப்பான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கட்டிடத்தில் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர் ராஜலட்சுமி பலியானார். பட்டதாரியான இவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர். உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சுவிசின் நெடுஞ்சாலை கட்டணம் உயராது -தேர்தலில் வாக்களிப்பு
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவிசின் அதி வேக நெடுஞ்சாலை கட்டணம் வருடத்துக்கு 40 இல் இருந்து 100 பிராங்காக உயர்த்தும் சட்டத்துக்கு மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.ஐரோப்பாவிலும் சுவிசிலும் ஜெர்மனியிலும் நெடுஞ்சாலைகளுக்கு தூரங்களுக்கான கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் சுவிசில் வருடம் ஒன்றுக்கு 40 பிரான்க் அறவிடப்பட்டு வருகிறது
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவிசின் அதி வேக நெடுஞ்சாலை கட்டணம் வருடத்துக்கு 40 இல் இருந்து 100 பிராங்காக உயர்த்தும் சட்டத்துக்கு மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.ஐரோப்பாவிலும் சுவிசிலும் ஜெர்மனியிலும் நெடுஞ்சாலைகளுக்கு தூரங்களுக்கான கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் சுவிசில் வருடம் ஒன்றுக்கு 40 பிரான்க் அறவிடப்பட்டு வருகிறது
போர்முலா ஒன்று கார் பந்தய சாம்பியனாக இந்த அவருடம் விட்டல் தெரிவாகி உள்ளார் .இந்த வருடம் நடை பெற்ற இருபது சுற்றுக்களில் இவர் பதின்மூன்று சுற்றுக்களில் முதலாம் இடத்து உள்ளார் . இறுதியாக நடந்த ஒன்பது போட்டிளில் தொடர்ந்து முதலாம் இடத்தை அடைந்ததனால் 2004இல் சூமாக்கர் சாதித்த சாதனையை எட்டி பிடித்துள்ளார் இவரது வாகனமான ரெட் புல் உம வாகன சம்பியனானது .இன்றைய பிரேசில் சாவோ பாலோ சுற்றி வென்றுள்ளார் .
பெய்ரூட், நவ. 24- சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ நகருக்கு அருகில் போராளிகள் வசமுள்ள இரண்டு மாவட்டங்களில் அதிபர் ஆசாத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மூன்று முறையாக நடத்தப்பட்டன. இதில் அல் பாப் பகுதிகளில் ஜெட் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கண்கள் உறங்கிடுமா? - பகுதி 1
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் மட்டுமா எப்பபோதும் உறங்காது கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன? பசியுள்ளவன் கண்களும், பிணியுள்ளவன் கண்களும், துன்பத்தால் துடிப்பவன் கண்களும், தனது குறிக்கோளை அடைய ஏங்குபவனது கண்களும் ஏன் பொறாமையும் வஞ்சகமும் உள்ள கண்கள் கூட உறங்குவதில்லை. 2009 மே மாதம் 18ம் திகதியின் பின் எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களின் கண்கள் இன்னும் உறங்காது விழித்திருக்கின்றன தெரியுமா? ஏனெனில் அவை யாவும் காதற்கண்களே. தன் நாட்டின் மேலும், தன் மொழியின் மேலும், உற்றார், பெற்றார், உறவுகள், குழந்தைகள் மேலும், மனிதர்கள் மேலும் வைத்த காதலால் எமது கண்கள் உறங்கிடுமா?
24 நவ., 2013
சென்னையில் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல் அமைச்சர்
சென்னை சாந்தோமில் நடந்த பயங்கர விபத்தில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி உயிர் தப்பினார். அடையாறு நோக்கி சென்ற ரங்கசாமியின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்ந்த விபத்தில் ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்தினால் சாந்தோம் பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி
குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி
வடக்கில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள்! பெண்கள் அச்சத்தில்: அடைக்கலநாதன் எம்.பி
வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரச படைகளின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககளை உடனடியாக தடுதது நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
வடக்கு மாகாணசபை ஆட்சியில் முட்டுக்கட்டைகள்! இணைத் தலைமையை ஏற்று செயற்பட முடியாது!- விக்னேஸ்வரன் [ பி.பி.சி ]
இலங்கையின் வடக்கே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவான வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. |
கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
கிளிநொச்சியில் 50 தமிழ் குடும்ப பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ்க் குடும்ப பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என
23 நவ., 2013
அந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் யாரும், இனி ஏ.டி.எம். பக்கம் போக, ஒன்றுக்குப் பத்து முறை யோசிக்கவே செய்வார்கள்! அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது, பெங்களூருவில்!
பெங்களூருவில், கார்ப்பரேசன் வங்கியில் மேலாளராக இருப்பவர், ஜோதி உதய். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல காலை 6.30மணிக்கு வேலைக்குப் புறப்பட்டார். போகும் வழியில், பணம் எடுப்பதற்காக, ஜே.சி. சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம்.முக்குள் சென்றார். சில மணித்துளிகளில்..
"தமிழகத்தின் முதல் நக ராட்சிகளுள் ஒன்றான எங்கள் தேவகோட்டை, தற்போது லஞ்சக் கோட்டையாக மாறிவிட்டது'’என புகார் குரல் எழுப்புகிறார்கள் ஏரியாவாசிகள்.
சேர்மன் அ.தி.மு.க. சுமித்ரா. ஆணையர் சரவணன். இருவருக்கும் ஈகோ யுத்தம் தீவிரமாக நடந்துவரும் நிலையில் நாம் அதிரடியாக ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கினோம்..
நகர அ.தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம், ""சொத்துக்களின்
ராஜபக்சே நடத்திய இன அழிப்பின் கொடூரங்களை எடுத்துக் காட்டுகிறது தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம். இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் ஓடிய குருதியோட்டத்தின் முழு வடி வமும் இங்கே சிற்பங்களாக சித்தரிக் கப்பட்டிருக்கின்றன. இந்த முற்றத்தின் மீது சில தாக்குதல்களை கடந்தவாரம் நிகழ்த்தியது அரசு இயந்திரம். சிற் பங்களாக வடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது விடுதலைப்புலிகளின் தோழர் ஓவியர்
சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது ஏற்காடு இடைத்தேர்தல். போட்டி யில் 11 பேர் குதித்திருந்தாலும் அ.தி.மு.க. சரோஜா வுக்கும் தி.மு.க. மாறனுக்கும் தான் நேரடிப் போட்டி. எங்குப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. தலைகளே தென்படு கின்றன. வோட் பேங்க் வைத்திருக்கும் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள் தேர்தலை புறக்கணித்திருப்பதால்
தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?
ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். இவ்வாறு ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
பொதுநலவாயத்தின் உதவியுடன் சித்திரவதை குறித்தே விசாரணை; மனித உரிமை ஆணைக்குழு கூறுகிறது
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி; முதலமைச்சர் குற்றச்சாட்டு
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதான ஆசிரியையே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர் காயலாம் என்று எண்ணுவது மடமை. விக்னேஸ்வரன்
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில்
அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு
என்னிடம் ஆதாரம் உள்ளது :
நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
நடிகை எஸ்.ராதா, தன்னை பைசூல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, 50 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கூறினார். நடிகை ராதா புகாரை, தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.
சாவதை தவிர வேறு வழியில்லை!- ஓர் அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.
22 நவ., 2013
கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல
ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!
கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?). சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி
48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கலைஞருவுடன் சோ சந்திப்பு
முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
21 நவ., 2013
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும்
சிறிலங்கா அரசுக்கு வருகிறது அடுத்த சோதனை; சர்ச்சையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுநலவாய அமைப்புக்கு தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடக்கவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் ஜெனிவா செல்வேன்!- விக்ரமபாகு
இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு அது பற்றிய
ஐநாவில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்! கூட்டமைப்பு நம்பிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைத்துலக நாடுகளினால் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் 12 சாட்சியாளர்கள்!
பிரித்தானிய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க திட்டமிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு 12 சாட்சியாளர்களை பிரித்தானிய அதிகாரிகளிடம்
காட்டி கொடுப்பவா்களின் காலம்.....
Megala Shanmugam
• அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!
முத்தையா முரளிதரனுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தயார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
பிரித்தானிய பிரதம மந்திரி டேவின் கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து, முன்னாள் கிரிககெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்ஜியம் உருவாகலாம்!- கலாநிதி தயான் ஜயதிலக
இலங்கையை சர்வதேச விசாரணையென்ற தூக்குமேடையில் நிறுத்தும் மாநாடாகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாடு அமையப் போகின்றது. எனவே டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடலாகாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளhர்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் உட்பட 85 பேர் விடுதலை! தமிழர் அல்லாதவர்களின் நயவஞ்சகம்: சட்டவாளர் "தடா" சந்திரசேகர்
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உட்பட்ட 85 பேர் தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை நீதிக்கு கிடைத்த வெற்றி. எமது இன உணர்வை யாரும் அழித்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் சட்டவாளர் "தடா" சந்திரசேகரன் தெரிவித்தார்.
20 நவ., 2013
டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!
என் அன்புக்குரிய டமில் மக்களே,
ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல
யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்
யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

-news/news/288737.html#sthash.xg3qjkCp.LomYrQM3.dpuf
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)