![]() புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கமே செய்ய முடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார் |
-
15 டிச., 2023
உலகத் தமிழர் பேரவையின் முயற்சிகளை தோற்கடிப்போம்
இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பு இல்லையாம்! - சொல்கிறார் சுமந்திரன்
![]() இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
வடக்கு, கிழக்கில் நாளை வரை தொடரப் போகும் கனமழை! - வெள்ள அபாயம்.
![]() வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தோன்றியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழையானது எதிர்வரும் 16.12.2023 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் |
மட்டக்களப்பு அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா!
![]() மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். |
14 டிச., 2023
'இமயமலை பிரகடனம்' என ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனாதிபத
![]() இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற தமிழ் துரோக அமைப்பை கொண்டு 'இமயமலை பிரகடனம்' என்ற ஏமாற்று நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றுகிறார். இது முற்றிலும் அயோக்கியத்தனமானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் |
அமெரிக்க காங்கிரசில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் யோசனை முன்வைப்பு
![]() இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது |
13 டிச., 2023
நெல்லியடியில் மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம்! [Wednesday 2023-12-13 15:00]
![]() யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நேசராசா அன்ரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
சம்பந்தனிடம் இமயமலைப் பிரகடனம்!
![]() ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார் |
உலக தமிழர் பேரவையின் சந்திப்புகள் - பிரித்தானிய தமிழர் பேரவை அதிர்ச்சி! [
![]() உலக தமிழர் பேரவை இலங்கையின் சிரேஸ்ட பௌத்த மதகுருமார்களை சந்தித்தமை இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இழந்து கொண்டிருக்கின்ற அவர்களின் அபிலாசைகளை அடைவதற்காக நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு தீவிரமாக பாடுபடும் அமைப்புகளிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. |
12 டிச., 2023
அமெரிக்காவை எச்சரித்த ஜெலென்ஸ்கி
![]() உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா தவறினால் புடினின் கனவு நனவாகும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்லைனில் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் தோன்றிய விளாடிமிர் புடின் (Vladimir Putin), 'ரஷ்யா வலுவாக வளரும்போது உக்ரைன் பலவீனமடையும்' என தெரிவித்தார் |
இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று
போதைப்பொருளுடன் யாழ்.பல்கலை மாணவன் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் "டிஜே நைற்"க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்
செட்டிக்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு துணைபோகிறதா ஐ.நா?
![]() மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையின் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக் குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில் கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். |
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 கைதிகள் தப்பியோட்டம்
![]() கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 100 வரையான கைதிகள் நேற்று தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 21 கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் |
உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு
பிணைக் கைதிகள் உயிருடன் வெளியேறமாட்டார்கள்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை
![]() எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது |
11 டிச., 2023
ரணில்- ராஜபக்ச அரசுக்கு வெள்ளையடிக்கிறதா உலகத் தமிழர் பேரவை? [Monday 2023-12-11 06:00]
![]() உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் |
எனது ஆதரவு கட்சி அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிப்பு: விசாரணைகளை மேற்கொள்ளுமாறு
வலி. மேற்கு கரையோர சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! Top News [Sunday 2023-12-10 19:00]
![]() அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. |
உலகத் தமிழர் பேரவையின் நகர்வு - குத்துவிளக்கு எதிர்ப்பு!
![]() தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். |
10 டிச., 2023
நீங்கள் யார் என்றே தெரியவில்லை! - உலகத் தமிழர் பேரவையினருக்கு “செருப்படி” கொடுத்த ஆறு. திருமுருகன். Top News
![]() தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார் |
9 டிச., 2023
கீர்த்தன் மங்களேஸ்வரன், கோபி யோகராஜா, மிலோஷா ஆரியரத்தினம் கஜன் யோகநாயகம் கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்கள் கைது
கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள்
7 டிச., 2023
விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு சாணக்கியனுக்கு உரிமையில்லை
![]() விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார் |
கடந்த ஆண்டு 1890 பிக்குகள் துறவறத்தை துறந்தனர்! [Thursday 2023-12-07 07:00]
![]() குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான பாட்டலி சம்பிக்க தெரிவித்தார் |
6 டிச., 2023
இலங்கையில் சர்வதேச சமூகம் கூட்டு தோல்வி! - பிரிட்டன் எம்.பி விளாசல்
![]() இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார் |
சுமந்திரனிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய விஜேதாச
![]() “ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
5 டிச., 2023
தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்
காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த
மொட்டின் வரவுசெலவுத் திட்டத்தை மொட்டு உறுப்பினர்களே தோற்கடிப்பு
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர் |
பிரிட்டன் நாடாளுமன்றில் இன்று இலங்கை குறித்த விவாதம்! - அவசரமாக ஆவணத்தை அனுப்பியது அரசாங்கம். [Tuesday 2023-12-05 18:00]
![]() பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது |
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல், இதய வால்வு கிருமி தொற்றுகள் அதிகரிப்பு
![]() அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது |
வீதி மறியல் போராட்டத்துடன் தொடர்பில்லை! - யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.
![]() யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர் |
தமிழ் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குகிறது இராணுவம்
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
யொஹானியைப் போல ரிசியுதன், சாருதன்,அகிலத்திருநாயகியையும் கௌரவியுங்கள்!
![]() பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார் |
4 டிச., 2023
கிளிநொச்சி வளாகத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது சிங்களப் பேரினவாதம்!
![]() யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது |
வங்கிகளின் 8000 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட 10 வர்த்தகர்கள்!
![]() இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார் |
யாழ்ப்பாணத்தை விட்டு விலகுகிறது மிக்ஜாம் புயல்
![]() தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
சுவிசில் இருந்து 3 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!
![]() சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் |
3 டிச., 2023
10 மாதங்களில் 15 ஆயிரம் படையினர் தப்பியோட்டம்!- நாட்டுக்கு பெரும் ஆபத்து.
![]() இலங்கையின் முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது |
28 நவ., 2023
வடிவேல் சுரேஸ் நீக்கம்! - சஜித் அதிரடி
![]() ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் |
27 நவ., 2023
கனடாவில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி!
![]() கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் |
26 நவ., 2023
போட்டியில் இருந்து மொட்டு ஒதுங்கும்?
![]() 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியில் அநுர குமார திசாநாயக்கவும் வேட்பாளராக களமிறங்க உள்ளனர். |
செப்டம்பர் 16 - ஒக்டோபர் 17 க்குள் ஜனாதிபதி தேர்தல்
![]() எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
25 நவ., 2023
உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு
பாலத்தீனம்: மேற்கு உலகை மிரட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?
மாவீரர் தினத்துக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக நீதிமன்றில் வாக்குறுதி!
![]() வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர். இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் |
23 நவ., 2023
19 நவ., 2023
ராஜபக்ஷமாரை யாராலும் அழிக்க முடியாது!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது. வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் |
மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலை தடுக்கும் பொலிசாரின் முயற்சி முறியடிப்பு
![]() மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்க கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரின் விடப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய வல்வை பொலிஸ்! - நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்று.
![]() மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. |
காங்கேசன் - நாகை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை - ஜனவரி முதல் வாரம் ஆரம்பம்
![]() காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
16 நவ., 2023
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: உச்சநீதிமன்றம் அதிரடி - ரிஷிக்கு பெரும் பின்னடைவு
![]() புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியா, சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோதப் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. பிரித்தானிய பிரதமர் ரிஷியும், முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லாவும், அதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டிவந்தார்கள் |
“பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது” - ஓ.பன்னீர்செல்வம்!
![]() பாஜக இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது |
ராஜபக்ஷக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா?
![]() நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்ஷக்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார் |
ஒவ்வொரு பிரஜையும் ராஜபக்சவினரிடம் இழப்பீடு கோர முடியும்!
![]() நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் |
யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்த்த மழை! - 850 குடும்பங்கள் பாதிப்பு.
![]() தொடரும் மழையினால் யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார் |
15 நவ., 2023
இறுதிப்போட்டியில் இந்தியா: கோலி, ரோகித், ஷமி சாதனை - வரலாறாகிப் போன அரையிறுதி ஆட்டம்
12 நவ., 2023
முல்லைத்தீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
![]() முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது |
கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு! - தேராவில் துயிலுமில்லம் முன் போராட்டம்.
முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. |
பொகவந்தலாவவில் காணாமல் போன 14 வயது சிறுமி வவுனியாவில் மீட்பு! - தொலைபேசிக் காதலனும் கைது.
![]() உடப்புஸ்ஸலாவை - ஒல்டிமார், தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14 வயதுடைய தியாகராஜ் சரணியா என்ற சிறுமி காணாமல் போன நிலையில் வவுனியா - நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளார். உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். |