புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2023

ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யும் சுவிஸ் அரசாங்கம்

www.pungudutivuswiss.com
 ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான சட்டமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகள் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் தரப்பினர் மீது தடை விதிக்கப்பட உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிவரம் நிலைமைகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வது குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

ad

ad