புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

12 காங்கிரஸ் முதல்வர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் 12  மாநில முதல்வர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டங்கள் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் நடந்த முடிந்த 5 மாநில சட்டசபையில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்கபடுவதாக தெரிகிறது.

ad

ad