சீனாவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கடத்தல்காரர்களால் நிர்மாணிக்கப்பட்ட இரகசிய சுரங்கப் பாதை
கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஷென்ஸென் நகரில் வாடகைக்கு பெறப்பட்ட கார் தரிப்பிடமொன்றிலிருந்து ஹொங்கொங்கிலுள்ள அடர்ந்த புதர் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது மின் விளக்குகள் காற்றோட்ட வசதி பொருட்களைக்கொண்டு செல்வதற்கான வசதி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
40 மீற்றர் நீளமும் 2.8 மீற்றர் அகலமும் ஒரு மீற்றர் உயரமும் கொண்ட மேற்படி சுரங்கப்பாதை புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசிகள் டப்லெட் கணினிகள் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கான வசதியைக் கொண்ட வாகனமும் காணப்பட்டுள்ளது.
இந்த இரகசிய பாதையானது சுமார் 3 மில்லியன் செலவில் 4 மாதங்களை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சுரங்கப்பாதையை புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்ட துளையிடும் நடவடிக்கையால் ஏற்பட்ட இரைச்சலை கேட்ட பிரதேசவாசிகள் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தை போலி ஆளடையாளத்தை காண்பித்து வாடகைக்கு எடுத்த நபரையும் அவரது சகாக்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.