புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

தி.மு.க.வின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார் கலைஞர்! டி.ஆர். கண்ணீர் பேட்டி!
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்,

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்திரர், 
தி.மு.க. தலைவரை பார்க்கலாம் என ஆற்காடு வீராசாமி கூப்பிட்டார். அந்த அன்பு கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை. எல்லா துறையிலும் எனக்கு அவர் ஆசான். தமிழிலும், அரசியலிலும் எனக்கு அவர் குரு. அன்பு கட்டளையை என்னால் மீறமுடியவில்லை. 
கட்சியில் இணைந்ததில் மிகவும் சந்தோஷம் என்றார். தலைவர் சொன்னாரு 'லட்சிய திமுகவாக இருக்கிற நீ, திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்' என்றார். அதனால் திமுகவில் இணைந்தேன் என்றார்.

ad

ad