என் அன்பு அழைப்பினை ஏற்று திமுகழகத்தில் டி.ராஜேந்தர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன்: கலைஞர் அறிக்கை
திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்
ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்,
இச்சந்திப்புக்குப் பின்னர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அன்பு தம்பி டி.ராஜேந்தர் அவர்கள் திமுகழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்தில் இருந்து விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதுகுறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். தம்பி ராஜேந்திரனும் விளக்கம் அளித்திருந்தார். இப்போது திமுகழகத்தின் பிரச்சார பகுதியை மேலும் வலுமைப் படுத்தும் எண்ணத்தோடு என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் திமுகழகத்தில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். நம்முடைய கழக உடன்பிறப்புகளும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவ்வாறு கூறியுள்ளார்.