28 டிச., 2013

இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டின் பெரம்புலூர் மாவட்டம் துறைமங்களம் பிரதேசத்தில் உள்ள அகதி முகாமுக்கு எதிரில் நேற்று இந்த அகதி தனக்கு தானே எரியூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

40 வயதான கோவிந்தசாமி என்ற இலங்கை அகதியே சம்பவதில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோவிந்தசாமி தனது தாயாருடன் முகாமில் வசித்து வந்ததுடன் அவரது மூன்று பிள்ளைகள் திருவண்ணாமலையில் உள்ள முகாமில் தனது மாமியாருடன் வசித்து வருகின்றனர்.
பெரம்பலூர் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்