28 டிச., 2013

காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார் ரஞ்சிதா :
 நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்
 

நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள்.  பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது பிறந்த நாள்.  நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நடிகை ரஞ்சிதா,  இன்று காவி உடை அணிந்து சன்னியாசி ஆனார்.  நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்.
ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். அப்போது ரஞ்சிதாவுக்கு ‘மா ஆனந்தமாயி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
 தீட்சை பெற்ற ரஞ்சிதா,  ‘’சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டு ள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்துவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன்.  இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும் அவருக்கு எதிராக செயல்படமாட்டேன்’’என்று கூறியுள்ளார்.