நான் லஞ்சம் வாங்கமாட்டேன். லஞ்சம் வாங்கவும் யாரையும் விடமாட்டேன் : கெஜ்ரிவால் சூளூரை
டெல்லியின் 7வது முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலுக்கு டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கெஜ்ரிவால் உரையாற்றினார். அவர், ’’ நாம் ஆட்சி புரிந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என ஹசாரேவிடம் கூறினேன். அதனால்தான் ஆம் ஆத்மி துவங்கி, இன்று அரசு அமைத்திருக்கிறது.
நம் தேசத்தில் உள்ள அனைத்து துன்பத்தையும் நீக்க ஊழலை ஒழித்தாக வேண்டும். அனைவரும் இணைந்து போராடினால் ஊழலை ஒழிக்கலாம்.
நம் தேசத்தில் உள்ள அனைத்து துன்பத்தையும் நீக்க ஊழலை ஒழித்தாக வேண்டும். அனைவரும் இணைந்து போராடினால் ஊழலை ஒழிக்கலாம்.
நான் லஞ்சம் வாங்கமாட்டேன். லஞ்சம் வாங்கவும் யாரையும் விடமாட்டேன். அரசு அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்டால், கொடுத்துவிடுங்கள். கொடுக்கும்போது தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துவிடுங்கள். இது பற்றி தெரிவிக்க 2 நாட்களில் தொலைபேசி எண் தரப்படும்’’ என்று உரையாற்றினார்.