இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 35 கப்பல் ஊழியர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் "அட்வன் போர்டு" என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான "சீ மேன் கார்டு" எனும் பாதுகாப்பு கப்பல் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள்,
25 பாதுகாவலர்கள் என மொத்தம் 35 பேரை "கியூ" பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 5680 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் இறுதியாக அந்த கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்தே புறப்பட்டு வந்திருப்பதும், கொச்சியில் கப்பலை சுத்தப்படுத்திய போது ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று சான்று பெற்றிருப்பதும் தெரியவந்தது.
அப்படியிருக்கையில் அந்த கப்பலுக்குள் துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் வந்தது எப்படி? கப்பல் செல்ல அனுமதியில்லாத மன்னார் வளைகுடா பகுதிக்குள் அமெரிக்க கப்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது ஏன்? கப்பலுக்கு திருட்டுத் தனமாக டீசல் வாங்கியது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் "கியூ" பிரிவு போலீசாருக்கு எழுந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்த, அந்தகப்பலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பால்டேவிட் டென்னிஸ் டவர்ஸ்(வயது 50), மாலுமிகளான இந்தியாவை சேர்ந்த லலித்குமார் குராங் (40), ரதேஸ்வர் திவேதி(34) ஆகிய 3 பேரையும் "கியூ" பிரிவு போலீசார் கடந்த 24–ந்தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அமெரிக்க கப்பல் ஊழியர்கள் அனைவரின் இ–மெயில், செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். கப்பலில் ஊழியர்கள் தங்கிருந்த பகுதி, ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம், கப்பலின் தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பார்வையிட்டு சோதனை செய்தனர்.
அதே நேரத்தில் கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு – 2 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதி பால்துரை முன்னிலையில் கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை 30–ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீனில் விடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் 22 பேர் சென்னை புழல் சிறையிலும், 13 பேர் பாளயங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
அவர்களை ஜாமீனில் விடுவிக்கும்படி, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கப்பல் ஊழியர்கள் 35 பேரின் சார்பில் மீண்டும் புதிதாக ஒரு ஜாமீன் மனு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு –1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கப்பல் ஊழியர்களின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ குற்றம் சாட்டப்பட்டுள்ள 35 பேர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆன நிலையிலும் "கியூ" பிரிவு போலீசார் இன்னும் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். எனவே, எனது கட்சிக்காரர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என்று வாதாடினார்.
இதனையேற்று, குற்றம் சாட்டப்பட்டுள்ள 35 பேரும் தினந்தோறும் "கியூ" பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் நீதிபதி கதிரவன் விடுவித்தார்.