28 டிச., 2013

 பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சாவகச்சேரி பகுதியில் வைத்தே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் இருந்து குறித்த பெண் சாவகச்சேரிக்கு வந்திருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் தொடர்புடையவர்கள் குறித்து எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.