புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை!

சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை

 விடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் இசைப்ரியா. விடுதலைபுலிகள் அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் பிடிபட்ட அவர் கொடூரமாக
பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த படுகொலையின் வீடியோ காட்சியை சமீபத்தில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இப்போது இசைப்பிரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். கன்னட இயக்குனர் கு.கணேசன் டைரக்ட் செய்து வருகிறார். “யுத்த பூமியல்லி ஒந்து ஹவு” என்பது படத்தின் பெயர். “போர்க்களத்தில் ஒரு மலர்” என்பது தமிழ் அர்த்தம். கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.
“நான் இதுவரை கேட்ட கதைகளில் என் மனதை நெகிழ வைத்த கதை இது. அந்த கதையில் உண்மை இருப்பதால் உடனே இசை அமைக்க ஒப்புக் கொண்டேன். நான் எப்போதும் பணத்துக்காக இசை அமைப்பவன் அல்ல. மனசுக்காக இசை அமைப்பவன். அந்த வகையில் இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு மனநிறைவை தருகிறது” என்று இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார்.
“இசைப்பிரியாவின் வாழ்வும், முடிவும் என் மனதை மிகவும் பாதித்தது. ஒரு படைப்பாளியாக அதை பதிவு செய்ய விரும்பினேன். இலங்கையின் சாயல் இருக்கும் கோலார், மங்களூர், குல்பர்கா பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதுவரை 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இசைப்ரியாவின் 7 வயது முதல் 27 வயது வரையிலான வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக இருந்து பதிவு செய்கிறேன்” என்கிறார் இயக்குனர் கு.கணேசன்.

ad

ad