புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

பிந்திய செய்தி 
இலங்கை இராணுவத்தில் இரவோடு இரவாக தடாலடி இடமாற்றம் ! என்ன நடக்கிறது ?



நேற்றைய தினம் இரவு (வெள்ளியன்று) மகிந்தரால் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைத் தீவில் இடம்பெற்றுள்ள பாரிய இராணுவ மாற்றம் இதுவாகும். இது ஏன் நடைபெற்றுள்ளது ? எதற்காக நடைபெற்றுள்ளது என்பதனை பார்க்க முன்னர், யார் யார் எந்த தண்ணியில்லா காட்டுக்கு மாற்றமாகியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா ?


அதிர்வு இணையம் அறிந்தவரை, யாழ் கட்டளைத் தளபதியாக இருந்துகொண்டு பெரும் ஆடாவடியில் ஈடுபட்டு வரும், மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க, சிறப்பு படைப்பிரிவின் தளபதியாக மாற்றம் பெற்றுள்ளார். கிளிநொச்சியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ் கட்டளை தளபதியாகிறார். மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் முல்லைத்தீவின் கட்டளை தளபதியாக மாற்றம் பெற்றுள்ளார். இதேவேளை இராணுவ தலைமை கட்டளை பீடத்தை மேஜர் ஜெனரல் மார்க் பொறுப்பேற்கிறார். இராணுவச் செயலாளர் நாயகமாக இருந்த மேஜர் ஜெனரல் ரணசிங்க, கிளிநொச்சி மாவட்ட சிறப்பு படைப்பிரிவின் தளபதியாக மாறுகிறார். 

மேலும் மேஜர் ஜெனரல் கருணசேகர, இராணுவத்தின் செயலாளராக பொறுப்பை ஏற்கிறார். ஆக மொத்தத்தில் 6 இராணுவம் அதி உயர் அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றம் பெறுகிறார்கள். இதற்கான கட்டளையை மகிந்தர் நேற்றைய தினம் (வெள்ளி இரவு) பிறப்பித்துள்ளார் என கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தர் கையொப்பமிட்ட பிரதிகள் 6 இராணுவத் தளபதிகளுக்கும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் அனைவரும் 1 ம் திகதி (01.01.2014) அன்று மாற்றம் பெறுவதாக மகிந்தனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இந்த தடாலடி மாற்றத்திற்கு என்ன அவசியம் ? ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டிற்கு முன்னதாக , அனைத்துலகை தாஜாசெய்ய மகிந்தர் முற்படுகிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அப்படி பார்த்தால் கூட மகிந்தர் தற்போது மாற்றியுள்ளது ஆழுனரை அல்லவே. இராணுவத் தளபதிகளை தானே. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவத் தளபதிகளை ஏன் யாழுக்கு நகர்த்தவேண்டும் ? இதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ad

ad