புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகிறது அமெரிக்கா

ஜெனிவாக் கூட்டத்தொடரில் கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு சாதகமான பிரதிபலிப்பை – முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இம்முறை
கேள்விக்கணைகளைத் தொடுக்கவுள்ளது என அறிய முடிகின்றது.
இதுதொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவரான எலின் சம்பர்லைன் டொனாஹே விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜெனிவாவில் உரையாற்றுவார் என்றும் தெரிய வருகிறது. இதற்கு புறம்பாக மார்ச் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து பிரதான உரையை நிகழ்த்தவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் 2013 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கையிடம் வினாக்களை தொடுக்கவுள்ளார் என்று இராஜதந்திர மட்டத்தில் பேசப்படுகின்றது.
அமெரிக்க அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கனவே நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஊக்கப்படுத்தும் வகையிலேயே தீர்மானம் அமைந்துள்ளது என அமெரிக்கா கூறினாலும் இதை இலங்கை ஏற்கவில்லை.
குறிப்பாக இலங்கை அரசு தீர்மானத்தை ஏற்கவில்லை என அறிவித்திருந்தாலும் ஜெனிவாத் தீர்மானத்தின் பிரகாரமே ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்தார் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, நல்லிணக் கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு தாம் முன் னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசும் ஜெனிவா வில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளது. மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க இலங்கையில் சார்பில் இந்த உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜெனிவாத் தொடரில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டிருந்ததுடன், வடக்கு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசு விடுத்த அறிவிப்புக்கும் வரவேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவது, உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு குடியேற்றம் போன்றவற்றில் இலங்கை அரசு எட்டியுள்ள முன்னேற்றத்தையும் அது வரவேற்றிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தது. ஐ.நாவின் தொழில்நுட்ப உதவி குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும், இறுதிநேரத்தில் இந்தியா தலையிட்டு அமெரிக்கப் பிரேரணையை மென்மையானதாக மாற்றியது என்பது தெரிந்ததே. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ad

ad