புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் விமல்சேகர தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கான வாராந்த மாநாடு இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட சிசுவின் மரணம் தொடர்பில் குறித்த சிசுவை பிரசவித்தவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இந்தநிலையில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினாலேயே குழந்தையை பிரசவித்திருந்தார்.

எனவே குழந்தை பிறந்து சில மணிநேரத்திலேயே  எரியூட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டிற்கு சற்று தொலைவில் புதைக்கப்பட்டிருந்தது எனவே இது குறித்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

ad

ad