புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2023

மாங்குளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி!

www.pungudutivuswiss.com

மாங்குளம்- பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம்- பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வான் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad