-

22 செப்., 2026

www.pungudutivuswiss.com
வடக்கு ஆளுநர் பதவி விலகுவாரா?
———————-
ஆளுநரின் செயலகம் அமைந்துள்ள கட்டடத்திற்கு குடிபுகு சான்றிதழ் (Certificate of Conformity) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என தகவலறியும் சட்டத்தின் கீழ் ஆளுநர் செயலகத்திடம் கடந்த 20.08.2026 அன்று விபரம் கேட்டிருந்தேன்.
அதற்கு CoC சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லை என இன்று பதில் வந்திருக்கிறது. (பதிலில் 09.09.2026 என திகதி போடப்பட்டுள்ளது)
வியாபார உரிமம் வழங்குவதற்கு CoC சான்றிதழை கட்டாயமாக்க கூடாது என்று கருத்து தெரிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக தனது சாவகச்சேரி நகர சபை உறுப்புரிமையில் இருந்து ஞானபிரகாசம் கிஷோரை (Gnanapragasam Kishor) 19.06.2026 ஆளுநர் பதவி நீக்கினார்.
CoC பெறாத கட்டடத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக சட்ட விரோதமாக கடமையாற்றும் ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும். அல்லது கிஷோரை பதவி நீக்கிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற வேண்டும். செய்வாரா?
பிரதி.. சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

ad

ad