-
25 ஜூன், 2013
24 ஜூன், 2013
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச
23 ஜூன், 2013
பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்
டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும் அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது
விடுதலை சிறுத்தை நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காமராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட 15 வழக்குகளில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி உத்தரவின் பேரில் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
22 ஜூன், 2013
வெள்ளிக்கிழமை (ஜூன்-14) மாலை நேரம். நமது செல்ஃபோனுக்கு வந்த வெளிநாட்டு அழைப்பு அலறியது. குவைத் சிறையில் இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ் இருவரையும் செவ்வாய்கிழமை தூக்கில் போடப்போறாங்க. அவர்களது தண்டனையை குறைக்கும் கருணை மனு மன்னரிடம் நிலுவையில் இருக்கும்போதே தண்டனையை நிறைவேற்றப்போறாங்க. எப்படியாவது தடுத்து நிறுத்துங்க...''
""இது சம்பந்தமான ஆவணங்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வோம்'' என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.
இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை சிறைக்கு வந்த சிறை அதிகாரிகள் வேறு வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மூவருடன் சுரேஷ், காளிதாஸ் இருவரையும் சேர்த்தே அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்த மாக இந்திய எம்பசி அதி காரிகளிடம் நேரில் போய் கேட்டால் சரி யான பதில் இல் லை. எங்கள் பிள்ளை களை செவ்வாய்க் கிழமை மதியம் (இந்திய நேரப் படி) 2.30-க்கு தூக்கு போடப்போகிறார்கள், அவர்கள் உயிர்களை காப் பாற்றுங்கள்'' என்று கதறினார்.
இந்த ஆவணங்களுடன் ஒரு கடிதம் வைத்து பிரதமர் அலுவலகத்திற்கும், மத்தியஅமைச்சர் வயலார் ரவிக்கும் அனுப்பியதுடன் போனிலும் பேசி தமிழர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்தார் விஜயன் எம்.பி. அடுத்த 10-வது நிமிடத்தில் மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி., ""பிரதமர் அலுவலகம் என் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக பதில் அனுப்பிவிட்டார்கள். விரைந்து நடவடிக்கை இருக்கும். சனிக்கிழமை குவைத்தில் அரைநாள்தான் வேலை நாள். அதற்குள் நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தியுள்ளோம்'' என்றார் நம்பிக்கையோடு.
சனிக்கிழமை (ஜூன்-15). நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி. ""மீண்டும் அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினரை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்'' என்றார் உறுதியாக.
ஞாயிறு (ஜூன்-16). காலை நம்மை தொடர்பு கொண்ட சுரேஷின் அப்பா சண்முக சுந்தரம்... ""தண்டனையை நிறைவேற்ற அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர். பயமா இருக்கு'' என்றார். ""நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் எம்.பி. விஜயன் மூலம் நடவடிக்கை கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று நம்பிக்கை யூட்டினோம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட சண்முகசுந்தரம்... ""தம்பி ரொம்ப நன்றி. எங்கள் பிள் ளைகளை தண்ட னை நிறைவேற்றும் அறையில் இருந்து அழைத்து வந்து பழைய செல்லில் அடைத்துவிட்டார் கள். சிறையிலும் எம்பசி அம்பாசிடரிட மும் போய் கேட்டேன். "உங்கள் பிள்ளை களுக்குத் தூக்குத் தண்டனை இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். நம்பிக்கை பிறந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிய நக்கீரனுக்கும் முழு முயற்சி எடுத்துக்கொண்ட தி.மு.க. எம்.பி. விஜயன் மற்றும் இந் திய அரசுக்கும் மற்ற வர்களுக்கும் நன்றி...'' என்று தழுதழுத்தார்.
அதன்பிறகு நாம் எம்.பி. விஜயனிடம் தொடர்புகொண்டு நன்றி சொன்னோம். "எனக்கும் அம்பாசிட ரிடம் இருந்து மெயில் வந்துள்ளது. இந்த முயற்சியை எடுக்கத் தூண்டிய நக்கீரனுக் குத்தான் நன்றி சொல் லணும்' என்றார்.
இந்த நிலையில் சுரேஷின் அம்மா மல்லிகா நம்மிடம்... ""என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று நான்கு வருடமாக இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர் களிடமும் போராடி ஓய்ந்து போனேன். இப்போது திடீரென தூக்கு என்று சொன் னார்கள். இப்ப உங்க முயற்சியால எங்க பிள்ளை உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு. ரொம்ப நன்றி...'' என்று தழுதழுத்தார்.
துரித நடவடிக்கை எடுத்து இரண்டு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றிய நாகை எம்.பி. விஜயனுக்கு நக்கீரன் சார்பிலும், தண்டனையில் இருந்து மீண்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் நன்றி கூறிக்கொள்வோம்.
21 ஜூன், 2013
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,3 5,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................3 5,000 கோடி
சிதம்பரம்..................... ..32,000 கோடி
சரத் பவார்.....................28,0 00 கோடி
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,50 0 கோடி
JM சிந்தியா...................... 9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா.......................... .7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,3
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800
கருணாநிதி....................3
சிதம்பரம்.....................
சரத் பவார்.....................28,0
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,50
JM சிந்தியா......................
கேடன் பிரகாஷ்..................8,200
A ராஜா..........................
சுரேஷ் கல்மாடி..................5,900
இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான “இனி அவன்” எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது.
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில்
20 ஜூன், 2013
பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
19 ஜூன், 2013
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)