மனைவிக்கு புற்றுநோய், ரணிலுக்கு விளக்கமறியல்- அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சிகள்! [Saturday 2025-08-23 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, பிணை கோரி மனு தாக்கல் செய்தார் |
T
மனைவிக்கு புற்றுநோய், ரணிலுக்கு விளக்கமறியல்- அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சிகள்! [Saturday 2025-08-23 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, பிணை கோரி மனு தாக்கல் செய்தார் |
ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல்! ![]() [Saturday 2025-08-23 07:00] |
![]() குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. நேற்று இரவு நீதிமன்றத்தில் நடந்த நீண்ட வாதங்களை அடுத்து, விக்ரமசிங்க ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்! [Friday 2025-08-22 07:00] |
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்தின்கீழும் பாதுகாப்புப்படையினரால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்மீது இன்னமும் அத்துமீறல்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மிகமோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது |
பாரபட்சமற்ற பன்னாட்டு சுயாதீன பொறிமுறையை நிறுவக் கோரி ஜெனிவாவுக்கு கடிதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது |
ஹர்த்தால் விவகாரத்தால் மட்டக்களப்பு மாநகர சபையில் வாக்குவாதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() நடந்து முடிந்த ஹர்தாலின் போது மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி சில மாநகர சபை உறுப்பினர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக மாநகர சபை அமர்வில் கவனத்தில் கொண்டு வந்ததையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது. |
சிஐடியினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்! [Wednesday 2025-08-20 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. |
கிழக்கில் ஹர்த்தால்- ஆதரவும் புறக்கணிப்பும்! [Monday 2025-08-18 18:00] |
![]() வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கிழக்கிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது |
மட்டக்களப்பில் கடைகளை மூடக் கோரிய மாநகர முதல்வர் மீது 65 என்பிபி உறுப்பினர்கள் முறைப்பாடு! [Monday 2025-08-18 18:00] |
மட்டக்களப்பு நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து முதல்வருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் 5 மாநகரசபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். |
செம்மணி புதைகுழி ஸ்கான் அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்! [Thursday 2025-08-14 07:00] |
![]() யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
தண்டனை விலக்கை ரத்து செய்து நீதியை வழங்க வரலாற்று வாய்ப்பு! [Thursday 2025-08-14 07:00] |
![]() பல தசாப்தங்களாக நிலவி வந்த தண்டனை விலக்கை ரத்துச் செய்து கொள்ளவும், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தாமதமின்றி நீதியை வழங்கவும் "வரலாற்று வாய்ப்பை" பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது |
செம்மணியில் சிலர் உயிருடன் புதைப்பு! [Thursday 2025-08-14 07:00] |
![]() செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் |
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி! [Wednesday 2025-08-13 07:00] |
![]() உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பும் விளாடிமிர் புடினும் நேரிடையாக சந்திக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா வென்றுள்ளதாக ஹங்கேரியின் வலதுசாரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்துவரும் ஓர்பன், ஹங்கேரி அரசாங்கத்தின் ரஷ்ய நெருக்கம் தொடர்பில் சில ஐரோப்பிய தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார் |
பிரதமரை பதவி விலகச் செய்ய ஜேவிபி முயற்சி! [Tuesday 2025-08-12 07:00] |
![]() பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டு பிரதமர் பதவியில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் |
இராணுவத்தின் கொலை வெறி இன்னும் அடங்குவதாகவில்லை! [Saturday 2025-08-09 17:00] |
![]() வடக்கில் உள்ள இனப்படுகொலை இராணுவத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவுதான் முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் |
மன்னாரில் தீவிரமடைந்த போராட்டம்! [Saturday 2025-08-09 17:00] |
![]() மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். |
நீதியை உறுதி செய்யுமா?- அரசாங்கத்திற்கு ஒரு சோதனை! [Saturday 2025-08-09 17:00] |
![]() முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் பலவந்தமாக அழைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குளத்தில் இறந்து கிடந்ததாகக் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார். பிரதேசவாசிகளை மேற்கோள் காட்டி அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் |
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம்- மட்டு. மாநகர முதல்வரிடம் விசாரணை! [Saturday 2025-08-09 07:00] |
![]() மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஜடி யினர் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் |
கிருமித் தொற்றினால் மாணவி மரணம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
தமிழரசுக் கட்சியை சந்திக்கத் தயார்! [Saturday 2025-08-09 07:00] |
![]() வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. |
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரியநேத்திரன் கடிதம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார |
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நல்லூருக்கு படையெடுத்துள்ள திருடர்கள்! [Friday 2025-08-08 17:00] |
![]() நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் |
மார்க்கம் இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் கிள்ளி செல்லையா! [Friday 2025-08-08 17:00] |
![]() கனடா- மார்க்கம் 7 ஆவது வட்டார இடைத் தேர்தலில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது |
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை! [Friday 2025-08-08 17:00] |
![]() தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். |
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த முடிவு! [Friday 2025-08-08 17:00] |
![]() மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. |
![]() கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கேள்வி நேர விவாதத்தின் போதே அமைச்சர் ஹர்சன நாணயகாரவிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் |
![]() முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது |
![]() மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றார். தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் சி.ஐ.டி.யினர் அமர்ந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
![]() செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எனினும் எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார் |
![]() யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. |
![]() மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.இந்த சம்பவம் நேற்று (04) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். |
![]() யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
![]() தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். |
![]() திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார் |
![]() யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 29 ஆவது யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது. |
![]() யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளா |
![]() இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கனடா அரசு ஜனவரி 2024 முதல் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான இஸ்ரேல் வரிவிதி ஆணையத்தின் பதிவுகள் மற்றும் சர்வதேச கப்பல் அனுப்பும் ஆவணங்கள், கனடாவிலிருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து ரகசியமாக ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன |
![]() பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கினால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடாவின் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கின்றது என அந்நாட்டு பிரதான ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளைய தினம் கனடா அமைச்சரவை கலந்தாலோசிக்க உள்ளது |
![]() மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். |
![]() இன அழிப்புக்குச் சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை போராட்டங்கள் நடைபெறவுள்ளன. வடக்கு கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு சமநேரத்தில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன |
![]() இரண்டு பிள்ளைகளும் நான் இறந்தால் அனாதைகளாகிவிடும் அதனால் எனது மகன் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யவேண்டும்என அவரின் தாயார் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார் |
![]() முல்லைத்தீவு மாங்குளம் - பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் |
![]() 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் அடங்கும் |
![]() செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை ஐ.நா நிபுணர் குழு மேற்பார்வை செய்ய வலியுறுத்தி வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. |
![]() உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 22 பேர் நேற்று கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். |
![]() யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் |
![]() ஜேர்மனி இன்று இந்திய மாணவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த விருப்பமான உயர்கல்வி தலமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய தகவலின்படி, ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை மொத்த மாணவர்கள் தொகையில் 13 சதவீதமாக உள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 42,578 பேருடன் முதலிடம் பிடித்துள்ளனர். |