தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.
www.pungudutivuswiss.comசுவிஸ்சில் தமிழில் மந்திரம் முழங்க மீண்டும் தங்கள் திருமணத்தை சுவிஸ் மக்கள் முன் புதுப்பிப்பித்து மாலை மாற்றிய நீதிபதி திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தம்பதியினர்
www.pungudutivuswiss.com
குடு செல்வம் , தூள் செல்வம் , கொலைகார செல்வம் , பாலியல் குற்றவாளி , பிரேமதாசாவிடம் கோடிகணக்கில் லஞ்சம் , மகிந்த விடம் , ரணிலிடம் கோடிக்கணக்கில் காசு வாங்கிவிட்டு தமிழ் மக்களிற்கு எதிராக செயற்பட்டார், மன்னாரில் ஒரு இளைய தலைமுறையையே போதைக்கு அடிமையாக்கினார்.
கூறியவர் விந்தன் கனகரட்ணம் கூறிய இடம் IBC தமிழ் ஊடகம்.
சில வருடங்களிற்கு முன்னர் சுமந்திரன் தூள் செல்வம் ரெலோ தூள் கடத்தும் கட்சி என்று சொன்னது உண்மை தான். அப்போதும் செல்வம் கையாண்ட உத்தி இதே கள்ள மெளனம் தான்.
செல்வத்தின் பலம் எப்போதும் எருமை மாட்டில் மழை பெய்தது போல எது நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல இருந்து தப்பிக்கொள்ளவது தான்.
அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி விட்டுத் திரும்பிய மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் மாதம் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டாம் மாதத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன், சாண்ட்ரா, அமித் பார்கவ் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேருமே வந்த முதல் நாளில் இருந்து அனைவரைப் பற்றியும் புட்டு புட்டு வைத்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இருக்குற இடம் தெரியாமல் இருந்த துஷார், அரோரா ஆகியோரை கோபப்படும் அளவுக்கு டிரிகர் செய்திருந்தார்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடத்தப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீடே ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாக மாறினார்கள். இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்களான மஞ்சரி, தீபக் மற்றும் பிரியங்கா ஆகியோர் கெஸ்டாக வந்திருந்தார்கள். அவர்களை போட்டியாளர்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு பாயிண்ட்ஸும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வந்திருந்த கெஸ்டே கடுப்பாகும் அளவுக்கு இவர்கள் செயல்பாடுகள் இருந்ததால், கெஸ்ட் அனைவரும் அப்செட் ஆகி வெளியேறினர்,
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடு, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெறுவதால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடை ஒரு நாள் முன்னதாக... அதாவது இன்றே நடத்தி இருக்கிறார்கள். இதனால் இன்றைய தினமே டபுள் எவிக்ஷனும் நடந்திருக்கிறது. அதில் யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா, ரம்யா ஜோ, துஷார், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், திவாகர், வினோத், பிரவீன், சபரி, எஃப் ஜே, கெமி ஆகிய 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். அதன்படி முதல் ஆளாக இந்த வாரம் எலிமினேட் ஆனது ரம்யா ஜோ தான். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக துஷார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஐந்தாம் வாரத்திலேயே டபுள் எவிக்ஷன் நடைபெறுவதால் மேலும் சில வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக 1,000 அடி நீளத்துக்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், தோல்வியடைந்துள்ளது. கொலன்ன பிரதேச சபையின் வரவு -செலவுத் திட்டத்தை பரிசீலிக்க சபை தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் சபை, வியாழக்கிழமை (06) கூடியது.
கனடா மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா, சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளான மிலானி தியாகராஜா, கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பிரதேசத்தில் பிறந்து, அங்கு கல்வி கற்றார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று (05) காலை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார். இதன்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்
நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.இன்று அவர் செய்த முறைப்பாட்டின்படி, கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது
மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!